ETV Bharat / state

திருப்பத்தூரில் ஆக்கிரமிப்பு இடங்கள் அப்புறப்படுத்துவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்! - removal of encroachment

திருப்பத்தூர் நகர பகுதிகளில் ஆக்கிரமிப்பு இடங்களை அப்புறப்படுத்துவதை கண்டித்து சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

திருப்பத்தூரில் ஆக்கிரமிப்பு இடங்கள் அப்புறப்படுத்துவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!

author img

By

Published : Jul 30, 2022, 11:14 AM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகர பகுதியில் உள்ள போஸ்கோ நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, சிவராஜ் பேட்டை, ஏரிக்கரை பகுதி, திருப்பத்தூர் - வேலூர் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றும் பணிகள் நீர்வளத் துறையின் சார்பாக தொடங்கியது.

திருப்பத்தூரில் ஆக்கிரமிப்பு இடங்கள் அப்புறப்படுத்துவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!

முன்னதாக நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 114 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறி, கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் அனைவருக்கும் நோட்டீஸ் கொடுக்கும் பணி தொடங்கியது. இதன்படி அவர்களாகவே அப்புறப்படுத்திக் கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

ஆனால் இதில் ஒரு தரப்பினர் நோட்டீஸ் வாங்க மறுத்ததால், அனைவருக்கும் பொதுவாக ஆக்கிரமிப்புகளை அகற்றப் போவதாக அறிவிப்பு செய்து, நேற்றைய முன்தினம் அனைத்து இடங்களிலும் தகவல் பலகை வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது.

ஆனால், இதனை கண்டித்து சுமார் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ண் உத்தரவின் பேரில், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் திருப்பத்தூர் வாணியம்பாடி சாலை பரபரப்புடனும் பதட்டத்துடனும் காணப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: அடையாறு ஆற்றங்கரை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை; தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.