ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளனின் பரோல் மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பரோல் முடிந்து இன்று புழல் சிறைக்குத் திரும்பிக்கொண்டிருந்த வழியில், பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து ஜோலார்பேட்டையில் இருந்து வாணியம்பாடி வரை காவல்துறை வாகனத்தில் வந்த பேரறிவாளன் மீண்டும் வீடு திரும்பினார்.
முன்னதாக, மே 19ஆம் தேதி பேரறிவாளனுக்கு 30 நாள்கள் சாதாரண சிறை விடுப்பு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னையை அடுத்த புழல் சிறையில் தண்டனையில் உள்ள பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் சிகிச்சைப் பெற விடுப்பு வழங்க வேண்டும் என அவரின் தாயார் அற்புதம்மாள் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
அக்கோரிக்கையை ஏற்று, கடந்த மே 28ஆம் தேதி சென்னை புழல் சிறையில் இருந்து பரோல் விடுப்புக்காக விடுவிக்கப்பட்ட நிலையில், மேலும் 30 நாட்கள் அவருக்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டிற்கு ஒரு கோடியே 28 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன!'