திருப்பத்தூர்: சௌளூர் கிராமத்தில் சிறிய தரைப்பாலம் உள்ளது- இந்த பாலத்தை சுமார் பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, ஏலகிரிமலை ஜலகாம்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.
இதனால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜலகாம்பாறை வழியாக திருப்பத்தூரில் உள்ள பல ஏரிகளை கடந்து ஊத்தங்கரை பாம்பாறு சென்றடையும் தண்ணீர், இடையில் சௌளூர் வழியாக தரை பாலத்தை கடக்கும் உபரி நீரால் தரைப் பாலம் உடைந்து பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.
கடந்த கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அதே தரைப்பாலம் அடித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆய்வு மேற்கொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எவ.வேலு மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா உத்தரவின் பேரில் தற்காலிக இரும்பைப் பயன்படுத்தி தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று(ஜூன் 17) ஊராட்சி நிர்வாகம் தற்காலிக தரைப்பாலத்தை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சுமார் பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்ப முடியாமல் ஆற்றை கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர் உடனடியாக தரைப் பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர் - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!