திருப்பத்தூர்: தமிழ்நாட்டில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்து வந்த தொடர் கனமழையால் கடந்த நான்கு மாதகாலமாக ஆறுகளில் தொடர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தற்போது பாலாற்றில் நீர்வரத்து குறைந்து வருவதால், ஆம்பூர் அடுத்த மாதனூர் பாலாற்றில் இரவு நேரங்களில் மணல் கொள்ளையர்கள் அளவுக்கு அதிகமான ஆழம் போட்டு டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளில் தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேப்போல் ஆம்பூர் ஏ,கஸ்பா மற்றும் சோமலாபுரம் பகுதிகளிலும் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தற்போது கோடை வெயிலினால் நீர் நிலைகள் மற்றும் விவசாய கிணறுகளில் நீர்வரத்து குறைந்து வருகிறது.
இதில், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் கவனம் செலுத்தி மணல் கொள்ளையைத் தடுத்து நீர்நிலைகளைப் பாதுகாத்து, வரும் காலங்களில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஏதுவாக அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க:மணல் கொட்டுவதில் தகராறு - செவியை கடித்து துப்பிய நபரால் பரபரப்பு