ETV Bharat / state

மாதனூர் பாலாற்று மேம்பாலம்: 3 மாதங்களாக மந்தமாக நடைபெறும் பணி - palar bridge damage

மாதனூர் பாலாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் மேம்பாலப் பணி மூன்று மாத காலமாக மந்தமான நிலையில் நடைபெற்றுவருவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

பணி மூன்று மாத காலமாக
பணி மூன்று மாத காலமாக
author img

By

Published : Jan 7, 2022, 8:58 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த மாதனூர் உள்ளி இணைக்கும் பாலாற்று மேம்பாலம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெய்துவந்த தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலம் ஒருபகுதி அடித்துச் செல்லப்பட்டது.

இதனால் கடந்த மூன்று மாத காலமாக மாதனூர் சுற்றியுள்ள உள்ளி, தோட்டாளம், கோபம்பட்டி, வளையல் காரப்பட்டி, குளிதிகை, செம்பேடு வளத்தூர் மேல்பட்டி அழிஞ்சிகுப்பம், கொத்தகுப்பம், ரெட்டிமாங்குப்பம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொழிற்சாலைகளுக்கும், மாணவர்கள் பள்ளிக்கும் செல்வதில் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி 60 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரக்கூடிய பள்ளிகொண்டா பாலத்தைப் பயன்படுத்திவந்தனர்.

எனவே மாதனூர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து உள்ளி குடியாத்தம் வழியாகச் செல்லும் உள்ளூர் பேருந்துகள், ஆந்திர மாநிலத்திற்கு காய்கறி ஏற்றிச் செல்லும் வாகனங்கள், கனரக வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு முற்றிலும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது.

அதன்பின் அப்பகுதி மக்கள் உடனடியாகத் தற்காலிக சாலை அமைத்து தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டும் சட்டப்பேரவை உறுப்பினர், பொதுப்பணித் துறை அமைச்சரிடம் மனு அளித்தனர்.

பாலாற்று மேம்பாலம்
பாலாற்று மேம்பாலம்

கடந்த ஆண்டுக்குள்ளே சாலைப் பணியை முடித்துத் தருவதாக ஆம்பூர் அருகே நடைபெற்ற விழாவில் பொதுப்பணித் துறை அமைச்சர் ஏ.வ. வேலு உறுதியளித்திருந்தார்.

ஆனால் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பணிகளால்தான் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, தற்காலிக மண் சாலை அமைக்கும் பணியை கடந்த மூன்று மாத காலமாக மந்தமான நிலையில் செயல்பட்டுவந்ததால் அப்பகுதி மக்கள், மாணவர்கள் தங்களது பணிகளுக்கும் பள்ளிக்கு செல்வதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மண் சாலை அமைக்கும் பணிகள் முடிவடைந்தும் புதிதாகச் சாலை அமைத்ததுபோல் ஆளும் கட்சியினர், சட்டப்பேரவை உறுப்பினர் திறப்பு விழாவுக்காக சாலையை மண் மேடை அமைத்து மூடிவைத்துள்ளனர்.

இதனால் மாதனூரிலிருந்து உள்ளி வழியாகச் செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மண் மேடை மீது சைக்கிளில் ஆபத்தான நிலையில் சாலையைக் கடந்துவரும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் நடந்துசெல்பவர்கள் மண் திட்டு ஓரமாக பாலாற்றில் விழும் அபாய நிலையில் சாலையைக் கடந்துவருவதால், உடனடியாகச் சாலையை மக்கள் பணிக்குத் திறந்துவிடும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கைவைக்கின்றனர்.

இதையும் படிங்க: Cockfight: வெறும் கால்களுடன் சேவல் சண்டை நடத்த அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.