திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உதயேந்திரம் பேரூராட்சியில் செயல்படாமல் உள்ள சிறுவர் பூங்காவில் பேரூராட்சி சார்பில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
இதனால் உதயேந்திரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பெருமளவில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறி பொதுமக்கள் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என வாணியம்பாடி - பேர்ணாம்பட்டு சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் ஆலோசனை மேற்கொண்டு விரைவில் தீர்வு காண்பதாக உறுதியளித்ததின்பேரில் பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனர்.