திருப்பத்தூர் அடுத்த கந்திலி எர்ரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காத்தவராயன் மகன் ஞானவேல் (24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது பெண்ணை காதலித்து வந்ததாகத் தெரிகிறது.
இது பெண்ணுடைய பெற்றோருக்கு தெரியவரவே ஞானவேலை கண்டிக்க அதே பகுதியைச் சேர்ந்த தேமுதிக திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணனுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக ஹரிகிருஷ்ணன், அவருடைய அண்ணன் மாதேஸ்வரன் ஆகியோர் ஞானவேலை அழைத்து பேசியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் அதிகமாகவே ஞானவேலின் கூட்டாளிகள் அதே பகுதியைச் சேர்ந்த ராஜாவின் மகன்கள் சந்தோஷ் (27), துளசி (30), பாலகிருஷ்ணன் மகன் கதிர்வேலு (25) ஜிடி குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் பெருமாள் (25) ஆகிய 5 பேர் கொண்ட கும்பல் ஹரி கிருஷ்ணன், அவருடைய அண்ணன் மாதேஸ்வரன் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதனால் சம்பவ இடத்திலேயே மாதேஸ்வரன் மயங்கி விழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாதேஸ்வரன் அழைத்துச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் அறிந்த கந்திலி காவல் துறையினர் ஞானவேல், சந்தோஷ், துளசி, பெருமாள் ஆகிய நான்கு பேரை கைதுசெய்துள்ளனர். கதிர்வேலு மட்டும் தலைமறைவாக உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதலுக்கு சமரசம் பேச சென்றவர் அடித்துக் கொலை! - Minor girl love issue
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே 14 வயது பெண்ணை காதலித்த விவகாரம் தொடர்பாக, சமரசம் பேசவந்த தேமுதிக மாவட்ட செயலாளர் அண்ணன் அடித்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது