திருப்பத்தூர்: சேலம் உட்கோட்ட ரயில்வே காவல்துறை சிறப்புப்பிரிவு தனிப்படையினர் நேற்று(ஜூன்.30) காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து சேலம் ரயில் நிலையம் வரை செல்லும் ஓடும் ரயிலில் கஞ்சா மற்றும் போதைப்பொருள்கள் கடத்தப்படுகிறதா என சோதனை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் ஜார்க்கண்ட மாநிலம் தன்பாத் ரயில் நிலையத்திலிருந்து, கேரள மாநிலம் ஆலப்புழா வரை செல்லும் விரைவு ரயிலில் தனிப்படையினர் சோதனை செய்து கொண்டு இருந்தனர். எஸ் 8 பெட்டியில் சந்தேகத்தின்பேரில் கழிவறை அருகே நின்று கொண்டு இருந்த இளைஞரை விசாரணை செய்ததில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறினர்.
சந்தேகத்தின் பெயரில் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை காவல் துறையினர் இருவரையும் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் விசாரணை செய்ததில், அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராமேஸ்வர் சாஹூவின் மகன் மகேந்திர சாஹூ(32) எனத் தெரிய வந்தது. இவர்கள் 6 கிலோ கஞ்சாவை விசாகப்பட்டினத்திலிருந்து ஈரோடு பகுதிக்கு கடத்தியதாக ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் ஓடும் ரயிலில் கஞ்சா கடத்தியதாக ஒடிசா மாநில இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஆசிரியை தம்பதிகளை கட்டிப்போட்டு 140 சவரன் நகை கொள்ளை - முகமூடியில் வந்த மர்ம நபர்கள் யார்?