ETV Bharat / state

லாரி மீது மோதிய கார் - ஒருவர் உயிரிழப்பு - திருபத்தூரி கார் விபத்து

வாணியம்பாடி அருகே முன்னால் சென்றுக்கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

Car accident  accident  thirupattur car accident  one dead in care accident  thirupattur news  thirupattur latest news  விபத்து  கார் விபத்து  சாலை விபத்து  திருபத்தூரி கார் விபத்து  திருப்பத்தூர் செய்திகள்
விபத்து
author img

By

Published : Oct 25, 2021, 11:02 AM IST

திருப்பத்தூர்: வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் காவலர் சுரேஷ்குமார். இவர் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் சென்றுள்ளார்.

அப்போது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வழியாக காரில் சென்று கொண்டிருந்தபோது சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது.

Car accident  accident  thirupattur car accident  one dead in care accident  thirupattur news  thirupattur latest news  விபத்து  கார் விபத்து  சாலை விபத்து  திருபத்தூரி கார் விபத்து  திருப்பத்தூர் செய்திகள்
விபத்துக்குள்ளான வாகனம்

இதில் காரில் இருந்த 4 பேரும் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இதில் தலை, உடல் முழுவதும் பலத்த காயமடைந்த காவலர் சுரேஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவருடன் வந்த மூன்று பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து நாட்றம்பள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இளைஞர் உயிரிழப்பு குறித்து காவலர்கள் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.