திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியை அடுத்த ஆத்தூர்குப்பம் பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண் வசித்து வருகிறார். சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் வீட்டிலேயே இருப்பதை அறிந்த, ஜங்கலாபுரம் ஜோகி வட்டத்தைச் சேர்ந்த பத்துரு (60) என்பவர் அந்தப் பெண்ணிடம் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றார்.
அப்போது அப்பெண் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் தப்பியோட முயன்ற முதியவர் பத்துருவைக் கையும், களவுமாக பிடித்தனர்.
இது குறித்து தகவலறிந்த நாட்றம்பள்ளி காவல்துறையினர், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக, வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்தப் புகாரின் பேரில், முதியவர் பத்துரு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: மூன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை- கூலி தொழிலாளி கைது