திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காகக் காவல் துறையினர் சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் ஆய்வுமேற்கொண்டார்.
வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்ட அவர், தன்னார்வலர்களிடம் கரோனா தடுப்புப் பணிகளில் காவலர்களின் செயல்பாடுகளில் ஏதேனும் குறைகள் உள்ளனவா எனக் கேட்டறிந்தார்.
பின்னர், வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதிக்குச் சென்ற அவர், தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 58 வயதான துணை ஆய்வாளர் ராஜமாணிக்கம் என்பவரிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
இதையடுத்து, 50 வயதுக்கு மேற்பட்டோரை கரோனா காவல் தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டாம் எனவும், அவர்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை குறித்த பரிசோதனைகளை அவ்வப்போது மேற்கொள்ள அறிவுறுத்தப்பட வேண்டும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: சென்னையில் வீடு வீடாகச் சென்று ஆய்வு - 5,218 பேருக்கு சிறு பாதிப்பு