ETV Bharat / state

நிவர் புயலால் ஒருங்கிணைந்த வேலூரில் உயிர்ச்சேதம் இல்லை - அமைச்சர் கே.சி. வீரமணி - Tirupathur district news

திருப்பத்தூர்: நிவர் புயலின்போது அரசின் நடவடிக்கையால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை எனப் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்தார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
author img

By

Published : Dec 2, 2020, 4:04 PM IST

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச. 02) அரசு சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி கலந்துகொண்டு, 436 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 25 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வங்கிக் கடன், 13 ஆதி திராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்டவற்றை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, "அதிமுக அரசு பெண் கல்வியை ஊக்கப்படுத்தியுள்ளது. அவர்களுக்குத் தேவையான மிதிவண்டி, புத்தகம், மடிக்கணினி உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்குகிறது. பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன" என்றார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

பின்னர் செய்தியாளர்களிடம் அவர், "நிவர் புயலின்போது அரசின் நடவடிக்கையால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. திருப்பத்தூரில் சாலைப் பணிக்காக அரசு மூன்று கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கியுள்ளது.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் ஏழை மாணவர்கள் மருத்துவராக வேண்டும். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தேர்தலை முன்வைத்தே பேசுகின்றனர்" எனத் தெரிவித்தார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

இதையும் படிங்க: ’அழகிரி புயலால் திமுகவுக்கு பாதிப்பு’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.