திருப்பத்தூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள் தனிச்சிறையில் இருந்த நளினி தற்போது பரோலில் வந்துள்ளார். இந்நிலையில் 5ஆவது முறையாக அவரது பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நளினி தனது தாய் பத்மாவுடன் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார். இதனையடுத்து நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி இன்று (மே28) மாலை நளினியை சந்தித்து பேசினார். முன்னதாக அவர் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உள்ள முருகனையும் சந்தித்து பேசினார்
நளினி வழக்கறிஞர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததை அடுத்து மீதம் உள்ள 6 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு கடந்த வாரம் ஆலோசனை நடத்தியது.
ஒரு வாரம் கடந்த நிலையில் அது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாததால் 6 பேரின் விடுலை தாமதமாக வாய்ப்புள்ளதால் நளினியின் கணவர் முருகனுக்கு 6 நாள் அவசர கால பரோல் விடுப்பு வழங்ககோரி நளினி சிறைதுறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதேபோல் முருகனின் பரோல் விடுப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் 1ஆம் தேதி மனு தாக்கல் செய்ய உள்ளோம். 6ஆம் தேதி அதே சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகனின் விடுதலை தொடர்பாக மனு தாக்கல் செய்ய உள்ளோம்” எனக் கூறினார்.
இதையும் படிங்க:பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு