தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் 5 ஆயிரத்து 946 சுயநிதி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்புவரை பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. அப்பள்ளிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர் அங்கீகாரம் ஆணை மாவட்ட கல்வி அலுவலர்களால் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று (டிச.17) திருப்பத்தூரில் 90 பள்ளிகளுக்கும், வேலூரில் 150 பள்ளிகளுக்கும், ராணிப்பேட்டையில் 80 பள்ளிகளுக்கும், திருவண்ணாமலையில் 140 பள்ளிகளுக்கும் என மொத்தம் சுமார் 460 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கும் தொடர் அங்கீகாரம் ஆணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
தமிழ்நாட்டில் 37 மாவட்டங்கள் ஒன்பது மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, பிற மாவட்டங்களில் உள்ள 2 ஆயிரத்து 900 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு மூன்று ஆண்டுக்கு ஒரு முறை வழங்கும் தொடர் அங்கீகாரம் இனிவரும் நாள்களில் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மின்வாரியத்தில் ஹெல்பர், வயர்மேன் பணியிடம் தனியாரிடம் ஒப்படைப்பு!