திருப்பத்தூர் மாவட்டம் கதிரிமங்கலம் ஊராட்சி சாமுண்டி அம்மன் கோவில் ஆலமரத்து வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் வீரமணி கால்நடை கிளை நிலையத்தை தொடங்கிவைத்தார்.
இந்தக் கிளை நிலையத்தின் மூலம் கால்நடைகளுக்கு தடுப்பூசி, சினை ஊசி, பண்ணை அமைப்பதற்கான ஆலோசனைகள் போன்ற பல்வேறு பயன்களை மக்கள் பெறுவர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாமில், மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 1,780 ஏக்கருக்கு உரிய விவசாயிகளுக்கு மானாவாரி தீவன விதைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்தத் தொடக்க விழாவில் நகரச் செயலாளர் டி.டி. குமார், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஜி. ரமேஷ் முன்னாள் மாவட்ட பெருந்தலைவர் லீலா சுப்பிரமணியம், கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கால்நடைகளுக்கான இலவச மருத்துவ முகாம் - தீவனம், கோமாரி நோய் தடுப்பூசி வழங்கல்