ETV Bharat / state

விபரம் புரியாமல் எதிர்கட்சியினர் வாய்க்கு வந்ததை பேசுகின்றனர் - அமைச்சர் கே .சி வீரமணி குற்றச்சாட்டு!

author img

By

Published : Jan 25, 2021, 5:08 AM IST

வாணியம்பாடியிலிருந்து ஊத்தாங்கரை வழியாக செல்லும் சாலை மாநில சாலையாக இருந்திருந்தால், எப்போதோ அது செப்பனிடப்பட்டிருக்கும் என தமிழ்நாடு பத்திரப் பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே .சி வீரமணி தெரிவித்தார்.

பத்திரப் பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே .சி வீரமணி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் வாணியம்பாடி திருப்பத்தூர் சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே வாணியம்பாடியில் இருந்து ஊத்தங்கரை வரை சுமார் 45 கிலோ மீட்டர் தூரம் இருவழி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதனை சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில், நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுவதற்கான பூமி பூஜைக்கு தமிழ்நாடு பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே சி வீரமணி இன்று அடிக்கல் நாட்டி, சாலை பணிகளை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், மாவட்ட ஆட்சித் தலைவர் சிவனருள் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பேசிய அமைச்சர் கே சி வீரமணி, 'நீண்ட காலமாக இருந்துவந்த பொது மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு வாணியம்பாடி முதல் ஊத்தங்கரை வரையிலான இருவழி தேசிய நெடுஞ்சாலையை நான்குவழி தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இச்சாலை பணிகள் விரைந்து முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சாலையை வைத்து எதிர்க்கட்சியினர் இதுவரை அரசியல் செய்து கொண்டிருந்தார்கள். இனிமேல் எதை வைத்து அரசியல் செய்ய போகிறார்கள். இந்தச் சாலை, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இரண்டு வழியாக சாலையாக இருந்த பொழுது, அதனை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் பின்னர் மத்திய அரசு இதனை நான்கு வழிச் சாலையாக மாற்றப்படும் என அறிவித்தது. மத்திய அரசின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப, சாலையை செப்பனிட சற்று தாமதம் ஏற்பட்டது. இருவழி சாலையாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இச்சாலை போடப்பட்டிருக்கும்.

இந்தத் தகவல் எல்லாம் தெரியாமல் எதிர்க்கட்சியினர் அரசியல் காரணங்களுக்காக மக்களை திசை திருப்பி வருகின்றனர். நீண்ட காலமாக இந்த சாலையை சீரமைக்க பொது மக்களும், அரசியல் பிரமுகர்களும் பல்வேறு போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சி மேற்கொண்டனர். இந்நிலையில் இருவழி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற அடிக்கல் நாட்டப்பட்ட நிகழ்ச்சி பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மக்களின் அடிப்படை தேவைகள் என்ன என்பதை முன் கூட்டியே அறிந்து அதனை நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படுகிறது.

ஒருகிணைந்த வேலூர் மாவட்டத்தில் நீண்ட நாட்களாக இருந்த குடிநீர் பிரச்சனை, காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டதன் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மட்டும் 106 மினி கிளினிக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதைப் போலவே பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

இதையும் படிங்க: கருணாநிதி பரம்பரைக்கே முதலமைசர் ஆகும் அதிஷ்டம் கிடையாது: அமைச்சர் கருப்பணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.