ETV Bharat / state

பொங்கல் வாழ்த்து தெரிவித்த அமைச்சர் கே சி வீரமணி - minister K C Veeramani conveys pongal wishes

திருப்பத்தூர் : சுற்றுலாத் துறை சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் அமைச்சர் கே. சி வீரமணி கலந்து கொண்டு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.

minister K C Veeramani conveys pongal wishes in tirupattur

author img

By

Published : Jan 12, 2021, 10:27 PM IST

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சிவனருள் தலைமையில் சுற்றுலாத் துறையின் சார்பாக பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. தமிழர்களின் பாரம்பரியப் பண்பாடு கலாச்சாரங்களை நினைவுகூறும் வகையில் மயில் ஆட்டம், சிலம்பாட்டம், கரகம், தெருக்கூத்து, கொக்கலிக்கட்டை ஆட்டம், தப்பாட்டம், மான் கொம்பு போன்ற கலைகளை செய்து காட்டி சிறுவர் முதல் பெரியவர் வரை, மாற்றுத்திறனாளிகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என சுமார் 250 பேருக்கு மேல் கலந்துகொண்டு பொங்கல் கொண்டாடட்டம் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.

இந்தக் கொண்டாட்டத்தில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே. சி. வீரமணி, மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் விழா அரங்கத்திற்கு காளைகள் பூட்டப்பட்ட மாட்டு வண்டியில் தாரை தப்பட்டைகள் முழங்க கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு வரவேற்கப்பட்டனர்.

minister K C Veeramani conveys pongal wishes in tirupattur
பொங்கல் கொண்டாட்டம்

இவ்விழாவில் அமைச்சர் கே. சி. வீரமணி பேசுகையில், தமிழர்களின் பாரம்பரியப் பண்பாடு கலாச்சாரங்களை நாம் மறந்துவிட்டோமோ என்கிற பயம் எல்லார் மத்தியிலும் இருக்கும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் உதயமாகி முதல்முறையாக மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடக்கும் பழமை வாய்ந்த பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

வெளியூருக்குச் சென்று படித்துக்கொண்டிருந்தாலும் பொங்கல் விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பி காளைகளையும் பசுக்களையும் குளிப்பாட்டி அலங்காரம் செய்து. பொங்கல் வைத்து வருடம் முழுவதும் உழைக்கும் உழவர்கள், காளை, பசுமாடுகளுக்கு ஓய்வு தரும் நாளாக உழவர் திருநாளை கொண்டாடி வருகிறோம்.

பழமை வாய்ந்த கலாச்சாரத்தை புதுமையாக கொண்டாடும் இந்நாளில் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இதையும் படிங்க... வேல் யாத்திரை - பொங்கல் விழா: ராகுல், நட்டா, பகவத் வருகையும் அரசியலும்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.