ETV Bharat / state

தமிழ்நாட்டில் அணைகளைக்கட்ட சாத்தியக்கூறுகள் இல்லை: அமைச்சர் துரைமுருகன்

வேலூரில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன் தமிழ்நாட்டில் அணைகள் கட்ட சாத்தியக்கூறுகள் இல்லை எனத் தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 6, 2022, 7:38 PM IST

வேலூர்: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் மாநில நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று 10 பள்ளிகளைச்சேர்ந்த 1968 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், 'மாணவர்களின் கல்வி இடைநிற்றலைத்தடுக்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு உதவிகளை தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. அதில் ஒரு திட்டம்தான் இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம். எனவே, மாணவர்கள் அரசு வழங்கும் பல்வேறு சலுகைகளைப் பயன்படுத்தி உயர் கல்வி பயில வேண்டும்.

இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தில் அமைச்சர் துரைமுருகன்

ஆட்சிகள் மாறினாலும் பள்ளி மாணவர்களுக்காக கொண்டுவரப்படும் திட்டங்கள் நிறுத்தப்படாமல் தொடர்ந்து செயல்படுத்தப்படும். வேளாண்மை செழிக்கும் வகையிலும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றும் அடுத்த ஆண்டு அணைக்கட்டுப் பகுதியில் அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அணைக்கட்டுப்பகுதியில் புதிய தொழில் பேட்டை ஒன்றும், அரசு கல்லூரியும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் துரைமுருகன்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகனிடம், ஆந்திர அரசு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணை கட்டப்படுவது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, 'அணைகள் கட்டப்படாமல் தடுக்க தமிழ்நாடு அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும். மேட்டூர் உபரி நீர் திட்டம், தர்மபுரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. வாய்ப்பு இருந்தால் பிற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும். தமிழ்நாட்டில் மிகப்பெரிய புதிய அணைகள் கட்ட சாத்தியக்கூறுகள் இல்லை. அதற்கான இட வசதியோ நீர்வரத்தோ இல்லை' என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: அப்பன் காசை மகளுக்கு கொடுப்பது தான் புதுமைப் பெண் திட்டமா; நெல்லையில் சீமான் கடும் விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.