திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி அம்மாவட்ட ஆட்சியர் சிவராமன் தலைமையில் நடைபெற்றது. இதில், வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி கலந்து கொண்டு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினி வழங்கி விழாவை தொடக்கி வைத்தார்.
இந்த மடிக்கணினியை பெற்றுக்கொள்வதன் மூலம் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள 103 கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களுடைய பணிகளை விரைந்து மேற்கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த விழாவில் சார் ஆட்சியர் முனீர், வட்டாட்சியர் மோகன், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல், அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.