சென்னை தனியார் மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் 3 மாணவிகள், 3 மாணவர்கள் என மொத்தம் 6 பேர் சென்னையிலிருந்து இன்று (ஜூலை 10) திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வழியாக ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்றனர்.
அவ்வாறு சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த பெயர் பலகை மீது மோதி தாறுமாறாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 4ஆம் ஆண்டு படித்து வரும் மருத்துவக் கல்லூரி மாணவி சண்முகி சௌத்ரி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
![விபத்தில் உயிரிழந்த மாணவி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15785322_2.png)
மேலும், காரில் பயணித்த 5 மாணவர்களை பலத்த காயங்களுடன் மீட்ட அப்பகுதி மக்கள், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் ஒரு மாணவன் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்த மாணவியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இடைவிடாது பெய்த மழையால் இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்