கோவையில் இருந்து சென்னை வழியாக கொல்கத்தா வரை செல்லும் கரோனா சிறப்பு அத்தியாவசிய சரக்கு ரயில், தெற்கு ரயில்வே மூலம் இன்று இயக்கப்பட்டது.
அதில் முன்று லட்சம் மாஸ்க்குகள், மாஸ்க் தயாரிக்க தேவையான எலாஸ்டிக்குகள் ஆகியவை அனுப்பப்பட்டுள்ளன. போக்குவரத்து முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் மூலமாக கரோனா மருத்துவ பொருட்கள் அனுப்ப இந்த ரயில் உதவிகரமாக இருக்கும் என்று திருப்பூர் ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பெரம்பலூரில் மாஸ்க் அணிந்து ரேசன் பொருள்கள் வாங்கிச்சென்ற மக்கள்!