திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த எலவம்பட்டி ஜீவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்மொழி (27). இவருக்கும் ஆந்திர மாநிலம், குப்பம் அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த வேல்முருகன் (30) என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகியும் இருவருக்கும் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.
குழந்தை இல்லாததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அருள்மொழி வேறு ஒரு ஆணுடன் நெருங்கி பழகி உள்ளார். இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதனால் அருள்மொழி 3 மாதம் கர்ப்பம் அடைந்துள்ளார்.
இந்த விவகாரத்தை கணவன் வேல்முருகன் அறிந்த நிலையில், கணவன் மனைவி இருவருக்குமிடையே மோதல் முற்றியுள்ளது. இதனால் மனமுடைந்த அருள்மொழி வீட்டில் இருந்து 10 நாட்களுக்கு முன்பு வெளியேறியுள்ளார். இதனால், மனைவியை காணவில்லை என்று குப்பம் காவல்நிலையத்தில் கணவன் வேல்முருகன் புகார் அளித்தார். அருள்மொழி கள்ளகாதலனுடன் இருப்பதை தெரிந்து இருந்து, அவரை பிரித்து அவரது தாயுடன் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அருள்மொழியுடன் அவரது கணவர் வேல்முருகன் சாமதானம் செய்ய வந்து மாமியார் வீட்டிற்கு சென்று இரண்டு நாள் தங்கி உள்ளார். அப்போது அருள்மொழியை வீட்டுக்கு வருமாறு கணவர் அழைத்துள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால்,ஆத்திரம் அடைந்த கணவன் கத்தியால் அவரை சராமரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி உள்ளார். இதனை அறிந்த அருள்மொழியின் தயார் சின்னபாப்பா அலறி அடித்து கொண்டு அக்கம் பக்கதினரை அழைத்துள்ளார்.
பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பின்னர் தப்பி ஓடிய வேல்முருகன் ஆந்திர மாநிலம் குப்பம் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரை திருப்பத்தூர் காவல்துறையினரிடம் குப்பம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். இதுகுறித்து திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:பகத் கி கோத்தி ரயில் விபத்துக்குள்ளானது... 50க்கும் மேற்பட்டோர் காயம்...