திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்து, வனப்பகுதிகளில் உள்ள வன விலங்குகளை வேட்டையாடுவதும், விவசாய நிலங்களில் வரும் பறவைகளை வேட்டையாடியும்வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அத்தகவலின் அடிப்படையில், ஆலங்காயம் காவல் துறையினர் நேற்று (டிச.06) பூங்குளம் ஆலமரத்து வட்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அனுமதியின்றி வீட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த வசந்தகுமார் (40) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த ஆலங்காயம் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சத்தீஸ்கரில் கரடி தாக்கியதில் நால்வர் உயிரிழப்பு... மூவர் படுகாயம்!