ETV Bharat / state

செல்பியுடன் தங்களது வாழ்கையை முடித்து கொண்ட காதல் ஜோடி! - ambur lovers selfie

திருப்பத்தூர்: ஆம்பூரில் இரவு நேரத்தில் காதல் ஜோடி ரயில் தண்டவாளத்தில் செல்பி எடுத்துக்கொண்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

lovers
lovers
author img

By

Published : Mar 21, 2020, 10:17 AM IST

Updated : Mar 21, 2020, 10:25 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீரக்கோவில் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு பேர் உடல் சிதறி கிடப்பதாக காவல் துறைக்கு வந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்தது பெங்களுருவில் பணிபுரிந்த சொக்கரிஷி குப்பம் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் (29), பூங்குளம் பகுதியைச் சேர்ந்த நந்தினி ( 26) என்பது தெரியவந்தது.

lovers
காதல் ஜோடி ரயில் தண்டவாளத்தில் செல்பி

இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவிக்காததால் திருமணம் செய்ய முடிவுசெய்து நேற்று இரவு ஆம்பூர் வந்துள்ளனர். ஆனால், ஆம்பூர் அடுத்த வீரக்கோவில் பகுதி ரயில் தண்டவாளத்தில் படுத்தப்படியே புகைப்படம் எடுத்துக்கொண்டு ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சம்பவம்குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில் முன் பாய்ந்த காஜல் ஜோடி

இதையும் படிங்க: '6 ஆயிரம் தாங்க ஓஹோனு வாழ்க்கை' - நிதி நிறுவன ஊழியர்கள் இருவர் கைது!

Last Updated : Mar 21, 2020, 10:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.