ETV Bharat / state

நீர்த்தேக்க தொட்டியால் கேள்விக்குறியாகும் பால்வாடி குழந்தைகளின் உயிர்! - Tirupathur District News

திருப்பத்தூர்: மக்களின் தேவைக்காக கட்டப்பட்ட குடிநீர் தொட்டியானது முழுமையாக கட்டப்படாததால் அதனருகில் உள்ள பால்வாடி பள்ளியில் பயிலும் குழந்தைகளின் உயிரானது கேள்விக்குறியாக உள்ளது.

முழுமையாக கட்டபடாத நீர்தேக்க தொட்டி
முழுமையாக கட்டபடாத நீர்தேக்க தொட்டி
author img

By

Published : Oct 8, 2020, 2:59 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் இருனாப்பட்டு பஞ்சாயத்து, கொட்டாவூர் பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் உள்ளன.

இப்பகுதி மக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக சுமார் 12 லட்சம் மதிப்பீட்டில் நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்காக ஒப்பந்தம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக போடப்பட்டது.
மேலும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், சட்டப்பேரவை உறுப்பினர் நிதியில் இருந்து ஒதுக்கி வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் மூலம் பிச்சனூரை சேர்ந்த கஜேந்திரன் என்பவருக்கு ஒப்பந்தம் விடப்பட்டது.

இந்நிலையில், இன்று வரை அதற்கான எந்த வேலை பாடும் செய்யப்படாமல் அஸ்திவாரம் மட்டும் போடப்பட்டு, மேலே உள்ள கம்பிகள் எல்லாம் துருப்பிடித்து ஒடிந்து விழும் நிலையில் உள்ளன.
இதுகுறித்து ஊர் நாட்டாமை மாணிக்கம் கூறுகையில், ”எங்கள் ஊரில் பல நாள்களாக இருந்த தண்ணீர் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இதுவரை அது நிறைவேறவில்லை.

ஒப்பந்தம் விடப்பட்டு ஆரம்பித்தவுடனேயே நிறுத்தி வைக்கப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டிக்கான இடத்தில் பெரிய குழியை தோண்டி வைத்துள்ளனர். இதனால் அங்கு, மழை நீர் தேங்கி ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.

மேலும் அதன் பக்கத்திலேயே பால்வாடி பள்ளி இருப்பதால் சிறு பிள்ளைகள் அப்பகுதியருகே அடிக்கடி விளையாட வருகிறார்கள். இதனால் அக்குழந்தைகளின் உயிருக்கு கூட உத்ரவாதம் இல்லை. நீர்த்தேக்கத் தொட்டி குறித்து பலமுறை நிதி கொடுத்த அமைச்சருக்கும், வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் மனு கொடுத்தும் பயனில்லை. நேரில் சென்று சொல்லி சொல்லி சலித்து விட்டோம். எங்கள் பிரச்சினையை உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் மனதில் கொண்டு தீர்த்து வைக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை” என்று வேதனையாகக் கூறினார்.
இதையும் படிங்க: சேது சிறப்பு ரயில்: மண்டபம் ரயில் நிலையத்தோடு நிறுத்தப்படும் - தெற்கு ரயில்வே

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.