ETV Bharat / state

school leave: தாமதமாக அறிவிப்பு - தவிக்கும் மாணவர்கள் - late announcement

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பள்ளி விடுமுறையைத் தாமதமாக அறிவித்ததால் மாணவர்கள் மழையில் நனைந்துகொண்டே வீடு திரும்புகின்றனர்.

தவிக்கும் மாணவர்கள்
தவிக்கும் மாணவர்கள்
author img

By

Published : Nov 29, 2021, 11:33 AM IST

திருப்பத்தூர்: மழை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுவருகிறது. ஆனால் விடுமுறை அறிவிப்பானது தாமதமாக சில மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பதால் மாணவர்கள், ஆசிரியர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிவருகின்றனர்.

அந்த வரிசையில் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தாமதமாகவே விடுமுறை அறிவித்துவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தவிக்கும் மாணவர்கள்
தவிக்கும் மாணவர்கள்

சில தனியார் பள்ளி மாணவர்கள், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தொலைவிலுள்ள பள்ளிக்குச் செல்ல காலை 7 மணிக்கே வீட்டிலிருந்து புறப்படும் சூழ்நிலையில், திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தாமதமாக சுமார் 8 மணி அளவிலேயே விடுமுறை அறிவிப்பதால் (late announcement) அனைத்துத் தரப்பினரும் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

தவிக்கும் மாணவர்கள்
தவிக்கும் மாணவர்கள்

இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மழையில் நனைந்துகொண்டே வீடு திரும்புகின்றனர். மேலும் தொலைவில் உள்ள மாணவர்கள் பேருந்திற்காக மழையில் நனைந்துகொண்டு நின்றுகொண்டிருக்கிறார்கள்.

இதனால் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்களும் பெற்றோர்களும் மாவட்ட ஆட்சியர் முன்கூட்டியே விடுமுறையை அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுக்கின்றனர்.

மழையில் தவிக்கும் மாணவர்கள்

இதையும் படிங்க : Heavy Rain - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.