ETV Bharat / state

பெண் காவல் ஆய்வாளருக்கு கரோனா! - கரோனா தொற்று

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் பெண் காவல் ஆய்வாளருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், கிராமிய காவல் நிலையம், அவர் குடியிருந்த குடியிருப்பு பகுதி ஆகியவை சீல் வைக்கப்பட்டுள்ளன.

பெண் காவல் ஆய்வாளருக்கு கரோனா!
பெண் காவல் ஆய்வாளருக்கு கரோனா!
author img

By

Published : Apr 23, 2020, 4:10 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் 17 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று முன்தினம் ஐந்து பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் வாணியம்பாடியில் கடந்த 21ஆம் தேதி சுகாதாரத்துறை சார்பில், காவல்துறையை சேர்ந்த 23 பேர், வருவாய்த்துறை, செய்தியாளர்கள் என 54 பேருக்கு சுவாப் (சளி) பரிசோதனை செய்யப்பட்டதில் 53 பேருக்கு தொற்று இல்லை எனக் கண்டறியப்பட்டது. இதில், பெண் காவல் ஆய்வாளர் ஒருவருக்கு மட்டும் தொற்று அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டு அவர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

கிராமிய காவல் நிலையத்திற்கு பூட்டு

இதனால் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையம், பெண் காவல் ஆய்வாளர் குடியிருந்த குடியிருப்புப் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து காவல் நிலையம் , குடியிருப்பு பகுதிக்கு சுகாதாரத்துறையினர் பூட்டு போட்டு சீல் வைத்தனர். மேலும் அவருடன் பணிபுரிந்த 37 காவலர்களில் 30 பேர் வாணியம்பாடி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திலும், ஏழு காவலர்கள் அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆய்வாளர் குடியிருந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தற்போது ஸ்வாப் பரிசோதனை நடைபெற்றுவருகிறது.

இதையும் பார்க்க: சீனாவைத் தொடர்ந்து தரவுகளை மாற்றும் அமெரிக்கா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.