திருப்பத்தூரை அடுத்துள்ள குனிச்சி அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், கெஜல்நாயக்கன்பட்டி அரசுக் கலைக்கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் 100 படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை அமைச்சர் கே.சி. வீரமணி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செய்துவருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது 500 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தமிழ்நாட்டில் நடக்கிற சிறப்பான ஆட்சியைப் பார்த்து திமுகவினர் திகைத்துப் போய் இருக்கின்றனர். இதனால், எதிர்க்கட்சி இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் ஆளுங்கட்சியைத் தொடர்சியாக திமுக விமர்சித்துவருகிறது. ஒரு வேலை மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்தால், உரிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை எப்போது? - ராமதாஸ் கேள்வி!