ETV Bharat / state

"ரூ.115 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்" - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம்! - MINISTER THA MO ANBARASAN

ரூ.115 கோடியே 35 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இதில் 17 முதன்முறை ஏற்றுமதியாளர்களிடம் இருந்து பொருட்களை கொள்முதல் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தா.மோ.அன்பரசன்
அமைச்சர் தா.மோ.அன்பரசன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2024, 5:00 PM IST

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் கொடிசியா வர்த்தக அரங்கில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வர்த்தக வளர்ச்சிக்காக, சர்வதேச வாங்குவோர் - விற்போர் (Buyer - Seller Meet) சந்திப்பு நிகழ்ச்சியானது நேற்றும் இன்றும் இரு தினங்கள் நடைபெற்றது. இதில், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழில் முனைவோர் பங்கேற்றனர்.

இதன் நிறைவு நாளான இன்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு பல்வேறு நிறுவனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் ரூ.115 கோடியே 35 லட்சத்து 50 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இதில், ரூ.1 கோடியே 68 லட்சத்து 50 ஆயிரத்துக்கு 17 முதல் முறை ஏற்றுமதியாளர்களிடம் இருந்து பொருட்கள் கொள்முதல் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னையில் நடைபெற்ற உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.46 கோடி அளவிற்கு தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. அதற்கு அடுத்த கட்டமாக, இங்கு இந்த நிகழ்ச்சியில் ரூ.115 கோடி அளவிற்கு தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.

இவை மாநிலத்தின் MSME தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும். சுய வேலைவாய்ப்புத் திட்டங்களுக்கான மானியம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குதல், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் என பல்வேறு திட்டங்களை MSME துறையின் வளர்ச்சிக்காக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த அரசு தொழில் முனைவராக முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோரை உருவாக்கி இருக்கிறது.

பட்டியல் இனத்தைச் சேர்ந்த 1,958 பேருக்கு ரூ.453 கோடி கடன் உதவி கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ரூ.230 கோடி மானியமாக கொடுத்து அவர்கள் தொழில் முனைவராக தேவையான உதவிகளை இந்த அரசு செய்துள்ளது. சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர், மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் சுமார் ரூ.208 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் 541 தொழில் வளாகங்கள் கொண்ட பண்ணடுக்கு தொழில் கூடங்கள் அமைய உள்ளன. தொழிலாளர்கள் தங்குவதற்காக அம்பத்தூர் தொழில்பேட்டை, கோவை குறிச்சி ஆகிய பகுதிகளில் விடுதிகள் கட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ”மக்கள் பணியே லட்சியம்.. மறுபடியும் ஆட்சி நிச்சயம்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுக்கு மடல்!

இம்மாவட்டத்தின் முக்கிய தொழிலாக உள்ள தென்னை நார் சார்ந்த தொழிலுக்காக ஐந்து இடங்களில் கயிறு குழுமங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ரூ.4 கோடி மதிப்பீட்டில் கயிறு உற்பத்திகளின் தரத்தை ஆய்வு செய்வதற்கான ஆய்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

ரூ.2,186 கோடி மதிப்பீட்டில் தென்னை ஏற்றுமதி இங்கிருந்து செய்யப்படுகிறது. MSME துறையினருக்கு ஏற்படும் மின்சார செலவுகளை குறைக்கும் விதமாக கடந்த ஆண்டு MSME துறை சார்பாக மின்சாரத் துறைக்கு ரூ.330 கோடி வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு இதுவரை ரூ.386 கோடி வழங்கப்பட்டுள்ளது. கோவையில் ரூ.126 கோடி மதிப்பீட்டில் குறிச்சி பகுதியில் அமைய உள்ள தங்க நகை தொழில் பேட்டை முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் தேவையான வசதியுடன் அமைத்துக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் தொழில் முனைவோர் பலர் கலந்துகொண்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.