ETV Bharat / state

ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு; 10 மணி நேர தாமதத்துக்கு பின் 47 பயணிகளுடன் டெல்லிக்கு பறந்தது! - CHENNAI AIRPORT

சென்னையில் இருந்து 172 பேருடன் டெல்லிக்கு புறப்படவிருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு சரிசெய்யப்பட்டு, 10 மணி நேரத்திற்கு பின் இரவு 8.11மணிக்கு 47 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.

ஏர் இந்தியா விமானம் கோப்புப்படம்
ஏர் இந்தியா விமானம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2024, 4:59 PM IST

சென்னை: சென்னையில் இருந்து இன்று( நவ 8) காலை 10 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் 164 பயணிகள், 8 விமான ஊழியர்கள் என 172 பேருடன் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஓடுபாதையில் செல்லத் தொடங்கிய போது, திடீரென விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருந்ததை விமானி கண்டுபிடித்தார்.

பின்னர் விமானம் வானில் பறப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்த விமானி உடனடியாக விமானத்தை ஓடுபாதையில் நிறுத்தினார். அதோடு சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து ஓடுபாதையில் நிறுத்தப்பட்டிருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தை இழுவை வண்டிகள் மூலமாக விமானம் நிற்க வேண்டிய இடத்திற்கு இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அதோடு விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி பழுதடைந்த இயந்திரங்களை சரிபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக முயற்சி செய்தும் விமானத்தை சரிபார்க்க முடியவில்லை. இதனால் விமானத்துக்குள் இருந்த பயணிகள் விமான ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க : பருவ மழைக்காலத்தில் தடையில்லா மின்சாரம்; அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தல்..!

இதையடுத்து பயணிகள் 164 பேரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். பயணிகளுக்கு உணவு போன்ற வசதிகளும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டன.

இதனையடுத்து விமானத்தின் இயந்திரக் கோளாறு சரிசெய்யப்பட்ட பின், சுமார் 10 மணி நேரம் தாமதமாக இரவு 8:11 மணிக்கு, சென்னையில் இருந்து டெல்லிக்கு 47 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.

164 பயணிகள் இந்த விமானத்தில் பயணிப்பதாக இருந்த நிலையில், சிலர் வேறு விமானங்களில் பயணம் செய்தனர் என்றும், சிலர் தங்களது பயணத்தை ரத்து செய்துவிட்டனர் என்றும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து, உடனடியாக எடுத்த நடவடிக்கையின் காரணமாக 164 பயணிகள் உட்பட 172 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.