திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (52). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கட்டடம் விற்பனையாளராக உள்ளார். இதனால் அங்கு முருகன் தனது குடும்பத்துடன் சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.
கந்திலி பகுதியிலும் அவருக்கு பூர்விக வீடு உள்ளது. அந்த வீட்டிற்கு மாதம் ஒரு முறை முருகன் வந்து செல்வார். அந்த வீடு அவரது மனைவியின் தம்பி ராமு என்பவரது மேற்பார்வையில் உள்ளது.
இந்நிலையில் ராமு வழக்கம்போல் இன்று (ஏப்.14) வீட்டை சுத்தம் செய்ய வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இச்சம்பவம் குறித்து உடனே ராமு தனது அக்காவின் கணவர் முருகனிடம் தெரிவித்தார்.
பின்னர் ராமு வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 11 சவரன் நகை, ரூ.7 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் தடையங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அன்னூரில் சிட்டி யூனியன் வங்கி ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி