திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் வசித்து வந்த ராமசாமி என்பவர் 50 ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை சீட்டு நடத்தி வந்துள்ளார். பின்பு 2021ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார்.
இந்நிலையில் ராமசாமியுடன் சீட்டு கட்டி வந்த அப்பகுதி மக்கள், ராமசாமியுடன் கூட்டுச்சேர்ந்து சீட்டு நடத்தி வந்த ராமசாமியின் மகள் சுஜாதா, மகன் குலசேகரன், மனைவி மதனம்மாள் மற்றும் சுந்தரராஜன் என்பவர் மகன் ரவிக்குமார் ஆகியோரிடம் தங்களது சீட்டு பணத்தை கேட்டுள்ளனர். இதற்கு அவர்கள் முறையான பதில் அளிக்காமல் வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
ரூ.23,500 மீட்பு: இதையடுத்து, இவ்விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. தீர்ப்பின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு துறை துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன், ஆய்வாளர் அசோகன், உதவி ஆய்வாளர் செந்தில்குமார், பெண் தலைமைக் காவலர் சசிகுமாரி ஆகியோர் இதுதொடர்பாக புலனாய்வு செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலும், பொதுமக்கள் கோரிக்கையின் உண்மை தன்மை அறிந்த பின் ராமசாமியின் சொத்து உடமைகளில் உள்ள ஒரு வீடு, மற்றும் ஒன்றரை ஏக்கர் நிலத்தை மதிப்பீடு செய்து அரசின் மூலமாக 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை சீட்டு கட்டி ஏமாந்த பொதுமக்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதியின் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: 'மாணவர்களிடம் நற்பண்புகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்' - அன்பில் மகேஷ் பொய்யாமொழி