திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஊசி தெருவில் திமுக கூட்டணிக் கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முகமது நயீம் வசித்துவருகிறார். இந்நிலையில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக ரூ.2 கோடி பணம், முகமது நயீம் வீடு, ஆதரவாளர்கள் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வாணியம்பாடி தேர்தல் அலுவலருக்கு அலைபேசியில் புகார் வந்தது.
இதையடுத்து ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அத்திக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் நிசார் அஹமத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர அமைப்புச் செயலாளர் முஹம்மது பைஜான் ஆகியோரது வீடுகளில் தேர்தல் அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
தேர்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலர்கள் செல்வி, சுரேஷ் ஆகியோர் தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட காவல் துறையினர், நான்கு குழுக்களாகப் பிரிந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டனர். முடிவில் எந்த ஒரு ஆவணமும், பணமும் கைப்பற்றப்படவில்லை.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று பாரத் பந்த்- போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்பு!