ETV Bharat / state

ஆம்பூரில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை!

ஆம்பூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் காலணி தொழிற்சாலை, நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆம்பூர் 2 வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

author img

By

Published : Jan 20, 2023, 5:25 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் கொம்மேஸ்வரம் பகுதியில் இயங்கி வரும் அல்தாப் என்ற தனியார் காலணி தொழிற்சாலை மற்றும் அல்தாப் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆம்பூர் கஸ்பா-ஏ பகுதியில் இயங்கி வரும் ’ருமானா தோல் தொழிற்சாலையில்’ நேற்று வருமானவரித்துறை அதிகாரி சந்தோஷ் தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக தொழிற்சாலை மேலாளர்கள், அலுவலகப் பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆம்பூர் பகுதியில் உள்ள பிரபல காலணி தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலையான பரிதா குழுமத்தில் சுமார் 6 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றினர். இந்நிலையில் தற்போது மேலும் ஒரு நிறுவனத்தில் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: வண்டி வாங்கியவர்களுக்கு இது தான் நிலைமையா? - ஆர்.சி புக் வழங்காத ஷோரூம் முன் தர்ணா செய்த நபர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.