ETV Bharat / state

வீட்டிற்கு முன்பு மது அருந்தக் கூடாது என்று கூறியதால் கத்திக்குத்து; மீட்கச் சென்ற இளைஞர் கொலை! - crime news in tamil

வீட்டிற்கு முன்பு மது அருந்தக் கூடாது என்று கூறியதால் கத்தியால் குத்தி கொலை செய்ய முற்பட்ட சம்பவம் திருப்பத்தூரில் அரங்கேறியுள்ளது.

கொலை செய்யப்பட்ட இளைஞர்
கொலை செய்யப்பட்ட இளைஞர்
author img

By

Published : Aug 7, 2023, 12:39 PM IST

திருப்பத்தூர்: ஆதியூர் பகுதியை சேர்ந்தவர்கள் கிரண் குமார் (வயது 50), துர்கேஸ்வரி (வயது 44) தம்பதியினர். இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவருக்கும் இடையே ஏற்கனவே வாய்த் தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சண்முகம், கிரண் குமார் வீட்டின் முன்பு அமர்ந்து மது அருந்தி உள்ளார். இந்த நிலையில் தன் வீட்டின் முன் மது அருந்த கூடாது என சண்முகத்திடம் கிரண் குமார் மற்றும் துர்கேஸ்வரி கூறி உள்ளனர்.

அதை கண்டுகொள்ளாத சண்முகம் திரும்பவும் அதே போல் அவர்கள் வீட்டு முன்பே மது அருந்திக் கொண்டிருந்து உள்ளார். இதனை துர்கேஸ்வரி தட்டி கேட்ட பொழுது சண்முகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு கிரண் குமார் மற்றும் துர்கேஸ்வரியை கத்தியால் குத்தி உள்ளார். இந்த நிலையில் அவ்வழியாக சென்ற இலக்கிநாயக்கன்பட்டியை சேர்ந்த வல்லரசு என்ற வாலிபர் துர்கேஸ்வரியை மீட்க சென்று உள்ளார்.

அப்போது அந்த வாலிபரையும் சண்முகம் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து அறிந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதன் பின்னர் கிரண் குமார் மற்றும் துர்கேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: முறுக்கு வியாபாரியை வெட்டி படுகொலை செய்த பள்ளி மாணவர்கள் கைது; கொலையின் பின்னணி என்ன?

இந்த சம்பவத்தில் உயிரிழந்த வாலிபரின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வாலிபரை கத்தியால் குத்திய சண்முகத்தை கைது செய்த போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தனது வீட்டிற்கு முன்பு மது அருந்தக்கூடாது என கூறியதன் காரணமாக தன்னை கத்தியால் குத்த வந்தவரை தடுத்த வாலிபரை இதற்கு முன் நான் பார்த்ததே இல்லை எனவும், யார் என்றே தெரியாமல் தன்னை காப்பாற்ற வந்த வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு உள்ளதாக துர்கேஸ்வரி வருத்தத்துடன் கூறினார்.

தனது வீட்டிற்கு முன்பு மது அருந்தக் கூடாது என்றுக்கூறிய காரணத்தால் வீட்டின் உரிமையாளர்களை கத்தியால் குத்தி கொல்ல முற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யார் என்றே தெரியாத பெண்ணை காப்பற்ற சென்ற வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை; கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.