ETV Bharat / state

'விசிகவை தடை செய்ய வேண்டும்' இந்து மக்கள் கட்சியினர் மனு! - திருப்பத்தூர் ஆட்சியரிடம் மனு

விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் வன்னியரசை கைது செய்யக்கோரி திருப்பத்தூர் ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சியினர் மனு அளித்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 13, 2022, 10:50 AM IST

விசிகவை தடை செய்க: இந்து மக்கள் கட்சியினர் திருப்பத்தூர் ஆட்சியரிடம் மனு!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (டிச.12) நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் ஏராளமானோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில், பொன்னேரி பகுதியைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பாளர் செல்வம் என்பவர் தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் 'விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு ஆகியோரை கைது செய்ய வேண்டும்' என்றும் 'அக்கட்சியைத் தடை செய்ய வேண்டும்' என்றும் கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், இந்தியாவிலிருந்து தமிழகத்தைப் பிரித்து, தனித் தமிழ்நாடு வேண்டும் என்று பொதுவெளியில் பிரிவினை பேசிய விடுதலை சிறுத்தை கட்சி நிறுவனர் திருமாவளவனையும், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசையும் கைது செய்ய வேண்டும்.

விசிகவை தடை செய்க: தேச தலைவருக்கு மாலை மரியாதை செலுத்தி வணங்க வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கு எதிராக தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், தேசத் துரோகமாக செயல்படுவதால், அக்கட்சியைத் தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

திருமாவளவனைக் கைது செய்க: பின் செய்தியாளர்களிடையே பேசிய இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பாளர் செல்வம், ''தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. விசிக தலைவர் திருமாவளவன், வன்னியரசு ஆகியோர தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும்.

அத்தோடு, விசிக அமைப்பையும் தடை செய்யவேண்டும். தமிழ்நாட்டில் பிரிவினைவாதம் பேசக்கூடிய பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். அந்தவகையில், தனி நாடு கோருகின்றனர். தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரிக்கப் பார்க்கின்றனர். தேச தலைவர் அம்பேத்கரைச் சாதிய தலைவராக பார்க்கக் கூடாது. இந்திய வரைபடத்திலிருந்து தமிழ்நாட்டை நீக்குவோம் எனக் கூறியுள்ளனர்' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'அப்பாவி இந்துக்களுக்காகத்தான் நாங்கள் போராடுகிறோம்; ஜெ. மீது மதிப்புள்ளவர்கள் பாஜகவை கைவிடுங்கள்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.