ETV Bharat / state

ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் மோசடி: பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்! - Economic Offenses Branch

ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் மோசடி தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் மோசடி: பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்!

author img

By

Published : Aug 6, 2022, 8:44 AM IST

வேலூர்: இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ் ( IFS) என்ற தனியார் நிதி நிறுவனம் வேலூர் மாவட்டம் காட்பாடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் வாடிக்கையாளரிடம் முதலீட்டாய் ஒரு லட்சம் ரூபாய் கட்டினால், மாதம் 8,000 ரூபாய் தருவதாக தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கானோரிடம் முதலீட்டை பெற்று மோசடி செய்து வந்துள்ளது.

ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் வேலூர்
ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் வேலூர்

இதுதொடர்பான புகாரை அடுத்து தமிழ்நாடு முழுவதும் 21 இடங்களில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர், நேற்று (ஆகஸ்ட்5) காலை முதலே அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது ஐஎஃப்எஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு, அவர்களின் வீடுகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

முக்கியமாக காஞ்சிபுரத்தில் மின்மினி சரவணன் என்பவரது வீடு பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்நிறுவனத்தை நடத்தி வந்த வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் வீட்டில் பொருளாதர குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தச் சென்றனர்.

லட்சுமி நாராயணன் வீடு பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது

அப்போது லட்சுமி நாராயணன் வீடு பூட்டப்பட்டு வீட்டில் உள்ளவர்கள் தலைமறைவாகினர். இதனால் நாள் முழுக்க காத்திருந்த பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர், அந்த வீட்டை பூட்டி, வீட்டிற்கும் இரண்டு இனோவா கார்களுக்கும் சீல் வைத்துவிட்டு சென்றனர்.

மேலும் இதுதொடர்பாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவினர் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தமிழ்நாடு முழுவதும் 21 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 1 கோடி ரொக்க பணம், தங்க நகைகள், லேப்டாப் மற்றும் சில ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஐ.எப்.எஸ். நிதிநிறுவன ஆடிட்டர் வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.