ETV Bharat / state

நான் நினைத்திருந்தால் திமுகவினர் மீது பல வழக்குகள் போட்டிருப்பேன் - இபிஎஸ்

'முதலமைச்சராக இருந்தபோது, நான் நினைத்திருந்தால் திமுகவினர் மீது பல வழக்குகள் போட்டிருப்பேன். நாங்கள் அப்படி செய்யவில்லை, மக்கள் நலனை மட்டும் கருத்தில்கொண்டு பணியாற்றிவந்தோம்' என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இபிஎஸ்
இபிஎஸ்
author img

By

Published : Sep 24, 2021, 1:31 PM IST

Updated : Sep 24, 2021, 2:06 PM IST

திருப்பத்தூர்: தனியார் உணவக விடுதியில் அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.

இதில், முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, செங்கோட்டையன், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

வாக்குறுதிகளை அள்ளிவிட்டு ஆட்சியைப் பிடித்த ஸ்டாலின்

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "திராவிட முன்னேற்றக் கழகம் தில்லுமுல்லு செய்தே ஆட்சியைப் பிடித்தது. அதேபோல் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற திமுக தில்லுமுல்லு செய்யும். அதனை அதிமுகவினர் முறியடித்து வெற்றிபெற வேண்டும்.

ஜெயலலிதா ஆட்சியில் சொன்ன வாக்குறுதியையும் செய்தோம். சொல்லாததையும் செய்தோம். அதனை மக்களுக்கு எடுத்துக்கூறி வாக்குச் சேகரிக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலின்போது கல்விக்கடன், வேளாண் பயிர்க் கடன் ரத்து செய்யப்படும் என திமுகவினர் பொய் வாக்குறுதி அளித்தனர்.

வாக்குகள் பெறுவதற்காகவே பச்சைப் பொய் சொல்லி ஸ்டாலின் ஆட்சியைப் பிடித்தார். கடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க சுமார் 525 தேர்தல் வாக்குறுதிகளைக் கூறினார். அதேபோல் முதலமைச்சரானால் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து எனக் கூறினார்.

நான் நினைத்திருந்தால்...!

கல்விக்கடன், வேளாண் பயிர்க்கடன் நகைக்கடன் தள்ளுபடி என பல வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை. நான் சுமார் நான்கு ஆண்டுகள் இரண்டு மாதங்களாக முதலமைச்சராக இருந்தேன்.

நான் நினைத்திருந்தால் திமுகவினர் மீது பல வழக்குகள் போட்டிருப்பேன். நாங்கள் அப்படி செய்யவில்லை, மக்கள் நலனை மட்டும் கருத்தில்கொண்டு பணியாற்றிவந்தோம். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினர் வெற்றிபெற்று பொதுமக்களுக்குச் சேவை செய்ய வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுப்போயுள்ளது - இபிஎஸ்

Last Updated : Sep 24, 2021, 2:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.