திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த தேவலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி அபிராமி. அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் அபிராமி திருமணம் மீறிய பந்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மணிகண்டனுக்கும் ராஜேஷிற்கும் இடையே தகராறு அடிக்கடி ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆத்திர மிகுதியில் மணிகண்டன் ராஜேஷ் வீட்டிற்குச் சென்று அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ராஜேஷை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,
ஆனால் ராஜேஷ் உடல் முழுவதும் 90 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதனை அடுத்து ராஜேஷ் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த உமராபாத் காவல் துறையினர், வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவியின் காதலரை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர் - தகாத உறவு
திருப்பத்தூர் : ஆம்பூர் அருகே மனைவியுடன் திருமணம் மீறிய உறவில் இருந்த நபரை, கணவர் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.