திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த குடியானகுப்பம் - ராம கவுண்டர் தெரு பகுதியைச் சேர்ந்த கொத்தனார் சங்கர், இவரது மனைவி விமலா. இவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
மேலும் இவர்களுக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. திருமணம் முடிந்து ஆரணி பகுதியில் வசித்து வந்ததாகவும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் குடியானகுப்பம் பகுதிக்கு குடி பெயர்ந்ததாகவும் விமலாவின் சகோதரர் தெரிவித்தார்.
இந்நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. இதேபோன்று நேற்று இரவு இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் தூங்கிய தன் மனைவி விமலாவை எழுப்பி, மீண்டும் தகராறு செய்துள்ளார், சங்கர். அப்போது ஆத்திரத்தில் மனைவி தலையின் மீது கல்லைப் போட்டுக் கொலை செய்துள்ளார்.
அதன்பின் பயந்துபோன சங்கர் தானும் கல்லின் மீது மோதி, தற்கொலைக்கு முயன்றுள்ளார். படுகாயமடைந்த சங்கரை மீட்டு அக்கம்பக்கத்தினர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர், விமலாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: 15 வயது சிறுமி வன்புணர்வு: ராஜஸ்தானில் கொடூரம்