திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் நகினா தபசூம் இவரது கணவர் சையது முனவர் இவர்களுக்குத் திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மனைவி நகினா தபசூம் ஜீவனாம்சம் கோரி வாணியம்பாடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக நேற்று வழக்கு வாய்தாவுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அப்போது நண்பர்கள்வுடன் சேர்ந்து சையது முனவர் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு நீதிமன்ற வளாகத்திலேயே தாக்கியதாக அவரது மனைவி வாணியம்பாடி நகரக் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து சையத் முனைவர் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சையத் முனவர் மீண்டும் இன்றி நகினா தபசூம் வீட்டின் அருகே சென்று அவரை மிரட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நகினா தபசூமின் உறவினர்கள் வாணியம்பாடி நகரக் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண் ஒருவர் திடீரென தீக்குளிக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் காவல்துறையினர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைந்து சென்றனர். இதனையடுத்து தலைமறைவாக உள்ள 6 பேரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: வாணியம்பாடி அருகே 2 பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. மீட்புப் பணியிலிருந்த காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு!