ETV Bharat / state

மாரடைப்பால் மனைவி கண்முன்னே கணவன் உயிரிழப்பு: ஓடும் பேருந்தில் நடந்த சோகம்! - திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே பேருந்தில் பயணம் செய்த கூலித்தொழிலாளி, மாரடைப்பு ஏற்பட்டு மனைவி கண் முன்னே உயிரிழந்த சம்பவம் உடன் பயணித்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

கூலித்தொழிலாளி
கூலித்தொழிலாளி
author img

By

Published : Nov 17, 2020, 9:27 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பனங்காட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் விவசாய கூலித்தொழிலாளி பாப்பண்ணன் (55). பணி காரணமாக வாணியம்பாடி சென்ற இவர், அங்கிருந்து, தனது மனைவி முருகம்மாளுடன் தனியார் பேருந்தில் ஆம்பூர் நோக்கிவந்துள்ளார். பயணத்தின் போது பாப்பண்ணனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. வலி வந்த சற்று நேரத்தில் ஓடும் பேருந்திலேயே அவர் இறந்துள்ளார்.

ஆம்பூர் பேருந்து நிலையம் வந்தவுடன் மனைவி முருக்கம்மாள் தன் கணவரை பார்த்த போது, அவர் இறந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். இந்த நிகழ்வு காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

பின்னர் தகவலறிந்து வந்த ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாப்பண்ணன் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஓடும் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்டு விவசாய கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் ஆம்பூர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கஞ்சா விற்பனையை தடுக்க முயன்ற பெண் மீது தாக்குதல்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.