ETV Bharat / state

மனைவி இறந்த துக்கத்தில் ரயிலில் தலைவைத்து கணவர் தற்கொலை! - இளைஞர் தற்கொலை

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காத கணவர் ரயிலில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்டார்.

Husband commits suicide over grief over wife's death
தண்டவாளத்தில் தலையிட்டு இளைஞர் தற்கொலை
author img

By

Published : Aug 11, 2020, 2:11 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாச்சியர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (34). இவர் ஆம்பூரில் தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு சசிகலா (33) என்ற மனைவியும் மேனேஷ் (5) என்ற ஆண் குழந்தையும் இருந்தனர்.

இந்நிலையில், சசிகலா கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த ராஜேஷ் நேற்று மாலை கண்ணடிகுப்பம் ரயில்வே தண்டவாளம் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அதிக அளவு மது அருந்திவிட்டு பெங்களூரு - சென்னை ரயில்வே மார்க்கத்தில் உள்ள தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் இன்று (ஆக.11) காலை அவ்வழியாக சென்ற அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ரயிலில் சிக்கி தலை துண்டாகிய நிலையில் ஒருவர் உடல் இருப்பதாக ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.