கல்லூரியின் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவியர் அனைவரும் பெண்கள் சுதந்திரம் குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து கல்லூரியில் இருந்து பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மாணவிகளால் மனித சங்கிலி நடத்தப்பட்டது. மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தலைமை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மனித சங்கிலியை திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புதுப்பேட்டை சாலைவரையிலும் மனித சங்கிலி அமைத்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை கைகளில் ஏந்தி முழக்கமிட்டனர். இதனையடுத்து, பேரணியில் பங்குக்கொண்ட அனைத்து மாணவிகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க : 'மத்திய அரசு கேட்கவும் இல்லை; நாங்கள் கொடுக்கவும் இல்லை' - அமைச்சர் கே. பாண்டியராஜன்