திருப்பத்தூர்: கந்திலி அருகே மண்டலநாயனகுண்டா பகுதியில் வசிப்பவர்கள் ராமசாமி சின்னம்மாவின் மகள்கள் நாகம்மாள்(72) சுந்தரி (65) காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளான இவர்களுக்கு திருமணம் ஆகாத நிலையில் குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
பல ஆண்டுகளாக தங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்று துறை சார்ந்த அலுவலர்கள் அனைவரிடமும் பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் சகோதரிகள் இருவரும நேற்று இரவு உறங்கிக் கொண்டிருந்த போது, சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் தால் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். பின்னர் அங்கு விரைந்து சென்ற கந்திலி காவல் துறை உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து பொதுமக்கள் கூறுகையில் இந்த விபத்திற்கான முழு காரணம் அரசு அலுவலர்கள் தான். அவர்களுடைய மெத்தனப் போக்கால் இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளது என குற்றம்சாட்டினர்.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுக்கு பயந்து மாணவி தற்கொலை: 70% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற சோகம்