தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடர்மழை பெய்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான புதூர், ஜனதபுரம், செட்டியப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் நிவர், புரெவி புயலால் கடந்த 10 நாள்களுக்கு மேலாக தொடர்மழை பெய்துவந்தது.
இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணி முதல் 9.45 மணி வரை சுமார் ஒரு மணி நேரமாகத் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: சிகு ஓடை கண்மாயில் நீர் நிரப்ப விவசாயிகள் கோரிக்கை