ETV Bharat / state

ஆம்பூரில் கூடுதல் படுக்கைகளுடன் கரோனா மருத்துவ மையம்: அமைச்சர் ஆய்வு - Triuppattur district news

திருப்பத்தூர்: ஆம்பூரில் கூடுதல் படுக்கைகளுடன் தயாராகிவரும் கரோனா மருத்துவ மையத்தை அமைச்சர் காந்தி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் ஆய்வு
அமைச்சர் ஆய்வு
author img

By

Published : Jun 2, 2021, 6:10 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் அளிக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு மருத்துவமனை, தனியார் பள்ளி கல்லூரி வளாகம், ஆம்பூர் வர்த்தக மையம் ஆகிய இடங்களில் 500 படுக்கைகள் அமைத்து மருத்துவம் அளித்துவருகின்றனர்.

இந்நிலையில் கூடுதலாக ஆம்பூர் வர்த்தக மையத்தில் ஆக்ஸிஜன், உயிர்க்காக்கும் கருவிகளுடன்கூடிய 100 படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

நேற்று (ஜூன் 1) தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி நேரில் ஆய்வுமேற்கொண்டு நடைபெற்றுவரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிவனருளிடம் கேட்டறிந்தார்.

உடன் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விஜயகுமார், ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் இருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.