வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இந்நிலையில், இவரிடம் சிகிச்சைப் பெற்ற நோயாளிகள், தொடர்பில் இருந்தவர்களைக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மருத்துவமனை முழுவதும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் கரோனா தொற்று நிலவரம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40ஆக இருந்தது. இந்நிலையில், கோணாமேடு பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தொடர்பிலிருந்த நான்கு வயது சிறுமியை பரிசோதனை செய்தபோது, அச்சிறுமிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
சிறுமியை சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுமி வசித்தவந்த பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையிலான வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்து சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பில் சதம் அடித்த திருச்சி