திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கோயிலுக்கு சென்ற கோனாமேடு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை, நூருல்லாபேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இரவு வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் சிறுமியின் பெற்றோர் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதை அறிந்த சிறுவன், சிறுமியை வாணியம்பாடியில் விட்டு சென்றுள்ளார்.
அதன் பின்னர் வீடு திரும்பிய சிறுமி நடந்ததை எல்லாம் அவரது தாயாரிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து தனது மகளை ஆசை வார்த்தை கூறி, கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அப்புகாரின் பேரில் காவல்துறையினர் சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவர் கொலை: நடுரோட்டில் சடலத்தை வைத்து சாலை மறியல்!