ETV Bharat / state

திருப்பத்தூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்! போலீசார் விசாரணை! - Gelatin sticks stashed away at home

Gelatin stick confiscation incident: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடிப் பொருட்களை திம்மாம்பேட்டை போலீசார் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 2:31 PM IST

திருப்பத்தூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள்

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடிப் பொருட்களை திம்மாம்பேட்டை போலீசார் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த சொரக்காயல்நத்தம் ஊராட்சி கோட்டக்கொள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பூங்கோதை. இவருக்கு சொந்தமான வீட்டில் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடிப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக நாட்றம்பள்ளி வருவாய் துறையினர் மற்றும் திம்மாம்பேட்டை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த ரகசிய தகவலின் பேரில் திம்மாம்பேட்டை காவல் துறையினர் மற்றும் நாட்றம்பள்ளி வட்டாச்சியர் குமார் மற்றும் வருவாய் துறையினர் பூங்கோதை வீட்டில் அதிரடியாக சோதனை செய்தனர். அந்த சோதனையில், பூங்கோதை வீட்டில் பதுக்கி வைத்திருந்த வெடிக்கும் தன்மையுடைய ஜெலட்டின் குச்சிகள், டெர்மினேட்டர் மற்றும் எலக்ட்ரிக் பயர்பாக்ஸ் உள்ளிட்ட வெடிப் பொருட்கள் பிடிப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: பாலியல் வன்புணர்வு செய்து பெண் கொலை.. 24 மணிநேரத்தில் குற்றவாளி கைது..

அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் பூங்கோதையிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கே.பந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் பாறைகளை வெடி வைத்து தகர்க்க தனது சகோதரியான பூங்கோதை வீட்டில் வெடி பொருட்களை பதுக்கி வைத்திருந்தது விஷயம் தெரிய வந்தது.

இதனை அடுத்து திம்மாம்பேட்டை போலீசார், சரவணன் உரிய அனுமதி பெற்று ஜெலட்டின் குச்சி மற்றும் வெடிப் பொருட்களை வைத்திருக்கிறாரா? என்ற கோணத்தில் என சரவணன் மற்றும் பூங்கோதையிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிப் பொருட்களான ஜெலட்டின் குச்சிகள் போன்றவற்றை வீட்டில் பதுக்கி வைத்திருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: வெறும் கையில் தூய்மை பணி.. அதிகாரியின் அலட்சியம்.. சர்ச்சையில் சிக்கிய திருப்பத்தூர் நகராட்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.